Skip to main content

அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்...

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

ஐ.எஸ் பயங்கரவாத இயக்க தலைவர் பாக்தாதி கொல்லப்பட்ட நிலையில், அந்த அமைப்பு அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்துள்ளது.

 

is successor takes charge

 

 

ஐ.எஸ் பயங்கரவாத இயக்க தலைவனாக செயல்பட்டுவந்த ஈராக்கை சேர்ந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி (48) சமீபத்தில் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க சிறப்பு படையினருடனான சண்டையின் போது, ஏற்பட்ட தோல்வியால் பாக்தாதி கோழை போல் தற்கொலை செய்து கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இந்த நிலையில், அல் பாக்தாதி பலியானதை ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் ஐ.எஸ் இயக்கத்துக்குப் புதிய தலைவராக அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாகத்தை கொல்லப்பட்டதற்காக அமெரிக்கா கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், அதற்காக மகிழ்ச்சி அடைய  தேவையில்லை என்று அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் தாக்குதல்கள் தொடரும் என்றும்  தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்