Skip to main content

கட்டுப்பாட்டை இழந்த இலங்கை... காபந்து அரசை அமைக்க வலியுறுத்தும் கூட்டணிகள்!

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

 Sri Lanka loses control ... Coalitions urge to form caretaker government!

 

இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை அமைச்சரவையைக் கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு இலங்கை அதிபரிடம் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

 

விலைவாசி உயர்வால் இலங்கையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு சவரன் தங்க நகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய், ஒரு பிரெட் பாக்கெட் 200 ரூபாய் என ஆடம்பர பொருள் முதல் அத்தியாவசிய பொருள்வரை பெரும் விலையேற்றத்தை சந்தித்த இலங்கை மக்கள் ஒரு கட்டத்தில் டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு போன்ற தொடர் பாதிப்புகளால் பொங்கியெழுந்து நேற்று இரவோடு, இரவாக அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே இல்லத்தை முற்றுகையிட்டுப் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு லிட்டர் பெட்ரோல் டீசலை வாங்குவதற்கு கூட, நீண்ட வரிசையில் காத்திருந்தும் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இப்படி, விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் தட்டுப்பாடு, நாள் முழுவதும் நீடிக்கும் மின்வெட்டு ஆகியவற்றால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள் இலங்கை மக்கள்.

 

 Sri Lanka loses control ... Coalitions urge to form caretaker government!

 

இதன்விளைவாக அவர்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும், அதிபர் கோத்தபய ராஜபக்சே மீது திரும்பியுள்ளது. இந்நிலையில்  இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி, லங்கா சமசமாக்கட்சி உள்ளிட்ட இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணிக் கட்சிகள் இலங்கை அமைச்சரவையைக் கலைத்துவிட்டு அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளை வைத்து காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கோரிக்கை வைத்துள்ளன.  

 

சார்ந்த செய்திகள்