ஃப்ரான்ஸுக்கு 3 நாள் சுற்று பயணமாக சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன், அங்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இந்த சந்திப்பில் இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து பாரிஸில் உள்ள ரானுவப் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிர்மலா சீதாரமன், தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவின் பொறுமையை சோதிக்கிறது. பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதால், அங்கு தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
மேலும், பாகிஸ்தான் - ஆப்கனிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இந்திய எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் தங்களது பொறுமையை பாகிஸ்தான் சோதிப்பதாகவும் குறிப்பிட்டார். ஃப்ரான்ஸ் மற்றும் இந்தியா தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.