ஒரே நாளில் 16 முறை சூரிய உதயத்தையும் சூரிய மறைவையும் பார்க்க வேண்டுமா? ஜீரோ கிராவிட்டியில் விண்வெளியில் நீந்த வேண்டுமா? இந்த ஆசையெல்லம் இருந்தால் இன்னும் ஒரு நான்கு வருடம் மற்றும் 9.5 மில்லியன் டாலருடன் (இந்தியா ரூபாயில் 61 கோடி) காத்திருங்கள் வரப்போகிறது விண்வெளி உயத்தர ஹோட்டல்.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ்சிலுள்ள அரோரா ஸ்டேஷன் அமைப்பு இந்த விண்வெளி ஹோட்டல் பற்றிய தகவலை கடந்த வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இந்த விண்வெளி ஹோட்டலானது யுஎஸ்ஸை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஒரியன் ஸ்பான் உருவாக்க முனைந்துள்ளது.
ஆறு பேர்கள் ஒரே நேரத்தில் விண்வெளி சென்று முழுதாக 12 நாட்கள் தங்கி விடுமுறை நாட்களை சிறப்பிக்கும் அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டவகையில் அமைக்கயிருப்பதாகவும். 2022ஆம் ஆண்டில் முதல் விருந்தினருக்கான வரவேற்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் ஓரியன் ஸ்பான் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் இந்த விண்வெளி ஹோட்டலுக்கு விருந்தாளியாக வரவிருப்பவர்ளுக்கு மூன்று மாத பயிற்சியும் முன்னதாவே அளிக்கப்படும். பூமியிலிருந்து சுமார் 200 மைலில் புவியின் சுற்றுவட்ட பாதையில் அமையவிருக்கும் இந்த ஹோட்டலில் இருந்து பூமியின் நீலநிற தோற்றத்தையும் 24 மணி நேரத்தில் 16 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்த்தமனத்தை உயர்தர விருந்தகத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பை பெறுவர் எனவும் கூறியுள்ளது.
மேலும் ஓரியன் ஸ்பான் நிறுவனத்தின் செயல்தலைவர் பங்கர் "எங்களுடைய கொள்கையானது மக்களுக்கு விண்வெளி பயணத்தை எளிதாக்குவதுதான்'' எனக்கூறினார்.