உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா. இந்தநாட்டில் நிலவும் கடுமையான சட்ட திட்டங்களும், அந்தாட்டின் கிம் ஜாங் உன்னின் செயல்பாடுகளும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் ஒரு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இறுக்கமான ஜீன்ஸ்களை அடைய தனது நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ள அவர், ப்ராண்ட்டட் டீ சர்ட்டுகள், வாசகங்கள் அடங்கிய டீ சர்ட்டுகள் ஆகியவற்றுக்கும் தடை விதித்துள்ளார்.
மேலும் சிகை அலங்காரத்திலும் கிம் ஜாங் உன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 15 வகையான சிகை அலங்காரத்திற்கு மட்டுமே அனுமதியளித்துள்ள அவர், நீளமாக முடிவைத்துக்கொள்வது, ஸ்பைக் வைத்துள்கொள்வது போன்ற சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ளார். மேலும் மூக்கு குத்திக்கொள்வதுக்கும் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.
மேற்கத்திய பேஷன் ட்ரெண்டை தடுக்கவும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கிம் ஜாங் உன்னின் இந்த தடைகளை கண்காணிக்க, அரசு நடத்தும் இளைஞர் அமைப்புகள், பேஷன் போலீஸாக செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.