இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் 390 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்பட்ட நேஷனல் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜக்ரன் ஹசீம் ஹோட்டல் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக இலங்கை அதிபர் சிறிசேனா உறுதி செய்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள சிறிசேனா, "ஏப்ரல் 4ம் தேதியே குண்டுவெடிப்பு அசம்பாவிதம் ஏற்படப்போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்திகள் ஏப்ரல் 12 வரை பரவி கொண்டிருந்தது. அதன்பின் தற்போது நடந்த இந்த தாக்குதல் காரணமாக இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என இலங்கை மக்களை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.