Skip to main content

தவறு நடந்திருப்பது உண்மைதான்! - மன்னிப்பு கோரி மார்க் விளக்கம்

Published on 22/03/2018 | Edited on 22/03/2018

முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டதில் தவறு நடந்திருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என மார்க் சுக்கர்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

mark

 

முகநூல் பயன்பாட்டாளர்கள் 5 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை, கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா எனும் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனர் பிரையன் ஆக்டன் இதுவே முகநூலை டெலிட் செய்யவேண்டிய நேரம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில், முகநூல் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் தனது முகநூல் பக்கத்தில், ‘முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் மிகப்பெரிய கடமை முகநூல் நிறுவனத்திற்கு உள்ளது. அதை நாங்கள் செய்யத்தவறினால் மக்களுக்கு சேவை செய்யும் தகுதியையே இழந்துவிடுவோம். தகவல்களைப் பகிர்ந்துகொண்டதில் நம்பிக்கை மீறல் நடந்துள்ளது. முகநூலை உருவாக்கியவன் என்கிற முறையில், இதில் எந்த விதிமீறல் நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பேற்க வேண்டும் என்பது புரிகிறது. இதற்காக வருந்துகிறேன். முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்