ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த வருடம் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தாய்லாந்திற்கு விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் போது ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இரு அணி வீரர்களும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களும் சில நிமிடங்கள் வார்னேவிற்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னேவிற்கு மிகவும் பிடித்த ஃப்ளாப்பி ஹேட் எனப்படும் தொப்பியை கொண்டு வந்திருந்த ரசிகர்கள் அதை உயரே தூக்கி அசைத்து ஷேன் வார்னே மீதான தங்களது அன்பை வெளிப்படுத்த மைதானமே உணர்ச்சிப் பிழம்பானது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது வார்னே பெயரில் வழங்கப்படும் என ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. உலகெங்கும் ரசிகர்களை வைத்துள்ள ஷேன் வார்னேவின் மரணம் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலிய மருத்துவரான அசீம் மல்ஹோத்ரா தெரிவித்துள்ள தகவல் ஒன்று மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்களான க்றிஸ் நீல் மற்றும் அசீம் மல்ஹோத்ரா ஆகியோர் ஷேன் வார்னேவின் பிரேதப் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு இதய நோய்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து க்றிஸ் நீல் மற்றும் அசீம் மல்ஹோத்ரா ஆகியோர் செய்த ஆய்வின் முடிவில், “ஏற்கனவே கண்டறியப்படாத இதய நோய் உள்ளவர்களுக்கு கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி உடல்நிலையில் முடக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் இவ்வளவு இளம் வயதில் மரணம் அடைந்தது அசாதாரணமானது. ஆனாலும் ஷேன் வார்னே அதிக எடை கொண்டவராக சமீக காலங்களில் இருந்துள்ளார் என்பதையும் சமீபத்தில் அதிக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார் என்பதையும் நாங்கள் அறிவோம். அவரது தமனிகளில் லேசான பாதிப்புகள் இருந்தன. இரண்டு தவணைகள் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டபின் இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான பாதிப்புகள் அதிகரித்தது” எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூறிய அசீம் மல்ஹோத்ரா, “ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் நாம் காணும் அதிகப்படியான இறப்புகளுக்கு கோவிட் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் மக்கள் பாதிக்கப்படுவதையும், தேவையில்லாமல் இறப்பதையும் தடுக்க விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், உலகளாவிய ரீதியில் அவற்றின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ஷேன் வார்னே ஃபிஷர் (Pfizer) என்ற அமெரிக்க நிறுவனம் தயாரித்த கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளை போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.