Published on 28/06/2022 | Edited on 28/06/2022

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உணவுப்பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு இந்த நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இனி பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும். இந்த கட்டுப்பாடானது ஜூலை 10ஆம் தேதிவரை தொடரும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய கட்டுப்பாடு அந்நாட்டு மக்களிடையே அவதியை ஏற்படுத்தியுள்ளது.