இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த மாதம் 6 தேதி பதவியேற்ற நிலையில் பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும் எனவும் கருதப்பட்டது.
இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியிலிருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத்தொடர்ந்து லிஸ் ட்ரஸ் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சர்ச்சைக்குள்ளான நிலையில் அடுத்தது பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் தற்பொழுது பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பிரதமர் அறிவிக்கப்படும் வரை காபந்து பிரதமராக லிஸ் ட்ரஸ் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.