Skip to main content

இந்தியாவிற்காக சீன நிறுவனத்துடனான உறவை முறிக்கும் பப்ஜி!!! 

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

PUBG

 

இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை அடுத்து சீன நிறுவனம் டென்சென்ட் உடனான ஒப்பந்தத்தை பப்ஜி நிறுவனம் ரத்து செய்துள்ளது.

 

பப்ஜி நிறுவனமானது தென்கொரிய நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான பப்ஜி மொபைல் விளையாட்டுச் செயலி உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.

 

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் கருதி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. உலகின் இரண்டாவது பெரிய நாட்டில் விதிக்கப்பட்ட இந்தத் தடையானது அந்நிறுவனத்திற்கு கணிசமான வருவாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பப்ஜி நிறுவனம் அந்தத் தடையை இந்தியாவில் விலக்கும் பொருட்டு சீன நிறுவனத்துடனான உறவை முறித்துள்ளது.

 

பப்ஜி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் புரிந்துகொண்டு மதிப்பளிக்கிறோம். தனிநபர் விபரம் குறித்தான தரவுகளைப் பாதுகாப்பதே எங்களது முதன்மைக் குறிக்கோள். இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் இந்தியாவில் பப்ஜி சேவை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசுடன் இணைந்து எடுக்க இருக்கிறோம்" என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்