Published on 12/09/2022 | Edited on 12/09/2022
செப்.14 ல் மோடி உஸ்பெகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
உஸ்பெகிஸ்தானில் செப்டம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். செப்டம்பர் 15 ல் நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய விளாடிமிர் புதின் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். சந்திப்பில் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15 மற்றும் 16 என இரண்டு நாள் நடைபெறும் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு, ஆப்கான் நிலவரம் ஆகியவை மாநாட்டில் முக்கிய பேச்சுப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.