பாடிக்கொண்டிருந்த போது எழுந்து நிற்காகததால் கர்ப்பிணிப் பெண் எழுந்து நிற்காததால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாடகி சமீனா சமூன் (பலராலும் சமீனா சிந்து என அழைக்கப்படுபவர்) கிராமங்களுக்குச் சென்று பாட்டுக்கச்சேரி நடத்தி வந்துள்ளார். கர்ப்பிணிப் பெண்ணான இவர் நேற்று பாகிஸ்தானி லர்கானா மாவட்டத்தில் உள்ள கங்கா கிராமத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றுள்ளார்.
இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது அமர்ந்தபடியே பாடிக்கொண்டிருந்த சமீனாவை, கூட்டத்தில் நின்றிருந்த தாரிக் அகமது ஜடோய் எனும் நபர் எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார். ஆனால், கர்ப்பிணிப் பெண்ணான தன்னால் எழுந்து நின்று பாடமுடியாது என சமீனா மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாரிக் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சமீனாவை சுட்டுள்ளார். இந்த நிகழ்வின் போது தாரிக் மது அருந்தியிருந்ததாக தெரிகிறது.
பலவீனமானவர்கள் பார்க்க முடியாத வீடியோ..
(24 yrs) #Pakistani Singer #SaminaSindhu shot dead by Accused Tariq Jatoi in festive ceremony . On refusal to stand and sing bcoz she was 6 months #pregnant .
— gallinews.com (@gallinews) April 12, 2018
After being threatned by Jatoi she stood up and sang the #song , yet she was shot dead by himhttps://t.co/FjYKw3OV06 pic.twitter.com/z2TjGg8OyR
இதில் படுகாயமடைந்த சமீனா நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது, வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீனாவின் கணவர் தனது மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தையைக் கொன்ற தாரிக் மீது இரட்டைக் கொலை வழக்கு பதியவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தாரிக் அகமதுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.