கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. அதேநேரத்தில் ஒமிக்ரான் வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக மேலும் சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆலோசிக்க தொடங்கின.
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனை குழு கூடி, கரோனா பூஸ்டர் டோஸ்கள் குறித்து ஆலோசித்தது. இந்த ஆலோசனைக்கு பிறகு அக்குழு, உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்களும், இன் ஆக்டிவேட்டடு (inactivated) கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பூசி இன்-ஆக்டிவேட்டடு தடுப்பூசி வகையை சேர்ந்ததாகும்.