பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் குடும்பத்தினர் முடிவு
பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்திருக்கு எதிராக பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தது. 6 வாரத்திற்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், 6 மாதத்திற்குள் விசாரணை முடிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் விலகினார். இந்தநிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்ய நாவஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.