Skip to main content

நீயா நானா - ஓலாவும் உபரும்.....

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

Ola

 

ஓலா - உபர் இடையே நடக்கும் கடும் போட்டியில் இரு நிறுவனங்களும் புதிய புதிய தொழில்களையும் புது புது சந்தைகளையும் நோக்கி நகர்கின்றன. கடந்த மே மாதம் உபர் நிறுவனம் இந்தியாவில் தனது உபர் ஈட் (Uber Eats) என்னும் உணவு பரிமாற்ற தொழிலை துவங்கியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் ஓலா நிறுவனமும் ஃபுட்பாண்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியது. இதன் இடையில் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி  மாதமும் லண்டனில் ஆகஸ்ட் மாதமும் தனது சேவையை தொடங்கியது ஓலா. அதன் பின் உபர் நிறுவனம், ஜப்பானுடன் இணைந்து பறக்கும் கார் தாயாரிப்பு ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தையை தொடங்கியது. இன்று ஓலா புதிதாக நியூஸிலாந்தில் தனது சேவையை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தத் தொடர் நிகழ்வுகளை பார்க்கும்போது ஓலாவும் உபரும் வரும் காலங்களில் எல்லா துறைகளிலும் கால் பதிக்கும் வாய்ப்பு தெரிகிறது. ஆரம்பத்தில் இந்நிறுவனங்களின் சேவையை பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுதிருக்கும் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும். அந்தத் துறைகளிலும் 'பீக் பிரைசிங்', 'ஹை டிமாண்ட்' என்று விலையை ஏற்றாமலிருந்தால் பரவாயில்லை.     

 

சார்ந்த செய்திகள்