அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை
ஐநா சபையின் ஆண்டு கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வட கொரியாவின் தொடர் ஆயுத சோதனைகளை உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதை சுட்டிக் காட்டிய டிரம்ப், அமைதி, நட்புறவை அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார்.
வடகொரியாவின் செயல்பாடு நாளுக்கு நாள் மோசமாக வருவதாக கூறிய டிரம்ப், அவசியம் ஏற்பட்டால் வடகொரியாவை அழிக்கவும் அமெரிக்கா தயங்காது என்று எச்சரித்தார். வடகொரியாவின் ஒவ்வொரு செயல்பாடும், அந்நாட்டு மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.