Skip to main content

அணுஆயுத ஒழிப்பை தொடங்கிவிட்டதா வடகொரியா? -டிரம்ப் பதில்

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

 

 

trump

 

 

 

கொரிய தீபகற்பத்தின் அணுஆயுத மண்டலங்களை தகர்க்கப்பதற்கான நடவடிக்கைகளில் ஏற்கனவே வடகொரியா இறங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

கடந்த மாதம் 12-ஆம் தேதியில் வரலாற்று கவனமிக்க சந்திப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு இருந்தது. இந்த சந்திப்பு வடகொரியா தனது அணு ஆயுத கொள்கையிலிருந்து விலக்குவதற்கான பேச்சுக்கவார்த்தையாக இருந்தது என டிரம்ப் அறிவித்திருந்தார். 

 

 

 

கிம் ஜாங் உன் உடனான சந்திப்பிற்கு பிறகு வடகொரியா அணுஆயுத கொள்கைகளை தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதா? என கடந்த புதன்கிழமை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ்சிடம் செய்தியாளர்கள் கேட்டபொழுது அதுபற்றி தனக்கு தெரியாது என ஜிம் மேட்டிஸ் பதிலளித்திருந்தார். 

 

அதைத்தொடர்ந்து வெள்ளைமாளிகையில் அமைச்சர்களுடனான சந்திப்பில் பேசிய டிரம்ப் வடகொரியா தனது பெரிய அணுஆயுத சோதனை தளங்களில் நான்கை அழித்துவருவதாக கூறினார். அதுமட்டுமின்றி மொத்த கொரிய தீபகற்பமும் அணுஆயுதமற்ற மண்டலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைதான் முக்கியமானது. ஏற்கனவே அதற்கான நடவடிக்கைகள் அங்கு தொடங்கியுள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.  

சார்ந்த செய்திகள்