Skip to main content

நேபாள பிரதமரின் கட்சித் தலைவர் பதவி பறிப்பு!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

kp sharma oli

 

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் கே.பி.சர்மா ஒலி. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்கும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது.

 

இந்தநிலையில், இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் தொடர்பாக பெரிதாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்ப கமல் தஹால் குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் இன்று  புஷ்ப கமல் தஹால் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் கூடியது. அதில், பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, புதிய தலைவராக, புஷ்ப கமல் தஹால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்தும் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டு, அப்பொறுப்புக்கும் புஷ்ப கமல் தஹால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்