புல்வாமா தாக்குதலுக்கு அடுத்து இந்தியா பாகிஸ்தான் உறவு மேலும் மோசமான நிலையை அடைந்துள்ள வேளையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் முஷாரப் இது தொடர்பான தனது கருத்தை கூறி பாக்கிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அபுதாபியில் உள்ள முஷாரப் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்றுள்ளது. வருங்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுத தாக்குதல் நடைபெறாது. ஆனால் அப்படி ஒருவேளை நடந்து, பாகிஸ்தான்தனது ஒரு அணுகுண்டை இந்தியா மீது வீசினால் கூட, அவர்கள் நம்மை 20 அணுகுண்டுகள் வீசி அழித்து விடுவார்கள். இந்தியாவை தாக்க ஒரேயொரு வழிதான் உள்ளது. நாம் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை அந்நாடு மீது வீச வேண்டும். அப்போதுதான் அவர்களால் நம்மை 20 அணு ஆயுதங்கள் மூலம் தாக்க முடியாது. ஆனால் அப்படி பாகிஸ்தான் அரசால் ஒரே நேரத்தில் 50 அணு ஆயுதங்களை இந்தியாவை நோக்கி செலுத்த முடியுமா?" என கூறியுள்ளார். முஷாரப்பின் இந்த பேச்சு அந்நாட்டில் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.