
கோவை மாவட்டம் துடியலூர் ஜி.எம். மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். 37 வயதான இவர் கிராஸ்கட் சாலையில் உள்ள ஒரு கிறிஸ்துவ பிரார்த்தனை கூடத்தில் மதபோதகராக இருந்து வருகிறார். மேலும் தமிழகம், கேரள, உள்ளிட்ட தென்மாநிலங்களில் கிறிஸ்துவ மதம் தொடர்பான இசைக் கச்சேரி நிகழ்வுகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிறிஸ்துவ சமூகத்தினரிடையே மிகவும் பிரபலமான நபராக அறியப்படுகிறது.
இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மாமனார் 17 வயது சிறுமி ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளதாக மாமனார் மற்றும் அவர் தத்தெடுக்கும் வளர்க்கு 17 வயது சிறுமி இருவரையும் அழைத்துள்ளார்.
அதேசமயம் ஜான் ஜெபராஜின் விருந்திற்கு சிறுமி தனது தோழியான 14 வயது சிறுமி ஒருவரையும் கூட அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டில் வைத்து இரு சிறுமிக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று ஜான் ஜெபராஜ் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனால் சிறுமிகள் இதனை உடனடியாக யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் 14 வயது சிறுமி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.