Skip to main content

வியன்னா பயங்கரவாத தாக்குதல்... பிரதமர் மோடி கவலை...

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

modi about vienna incidentmodi about vienna incident

 

 

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். 

 

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வியன்னாவின் ஆறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதில் பயங்கரவாதி ஒருவரும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலர் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருந்த நிலையில், ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "வியன்னாவில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதல்களால் ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஆஸ்திரியாவுடன் துணை நிற்கும். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்