Skip to main content

கராச்சியில் தாவுத்..? முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்... ?

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

pakistan bans dawood

 

 

கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தாவுத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதாக பாகிஸ்தான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

 

தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி செல்வதை தடுக்காத காரணத்தால், கடந்த 2018 ஆம் ஆண்டு, தீவிரவாதிகளுக்கு எதிரான நிதியுதவி தடுப்பு குழு பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் வைத்தது. மேலும், இதேநிலை நீடித்தால் பாகிஸ்தானைக் கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டியது வரும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தங்களது நாட்டிலிருந்து செயல்பட்டுவரும் 88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடுமையான நிதிப் பரிமாற்ற தடையை விதித்துள்ளது பாகிஸ்தான்.

 

ஹபிஸ் சயீத், மசூத் அசார் ஆகியோர் பெயர்களுடன் தாவுத் இப்ராஹிம் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து செயல்படுவதை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாவுத் இப்ராஹிம் கராச்சியில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட தாவுத் இப்ராஹிம், பாகிஸ்தானில் வசித்துவருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ஆனால், இந்தியாவின் இந்த குற்றச்சாட்டைப் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்த சூழலில், தடைசெய்யப்பட்ட பட்டியலில் தாவுத் இப்ராஹிம் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்