![masood azhar father in law died in indian attack](http://image.nakkheeran.in/cdn/farfuture/acA5kIFSYUTEBLOZr8CWGSHFSdMkpckHugjONFKDzP8/1551182050/sites/default/files/inline-images/masood-std.jpg)
கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவரான மசூத் ஆசாரின் மாமனார் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் முக்கிய தலைவராக அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.