Skip to main content

பதவியை துறந்த மலேஷிய மன்னர்; திருமணம் குறித்து வந்த வதந்தியால் முடிவு..?

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

 

gsbvs

 

மலேசியாவின் பதினைந்தாவது மன்னரான ஐந்தாம் சுல்தான் முகம்மது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 49 வயதான இவர் 25 வயதான ரஷ்ய அழகி பட்டம் வென்றவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவின. இதனையடுத்து இந்த செய்திக்கு எந்தவித விளக்கமும் தெரிவிக்காமல் இருந்த மன்னர் தரப்பு தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மலேசியா மன்னரான ஐந்தாம் சுல்தான் முகம்மது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரது உடல்நிலையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு மன்னர் முதன்முதலாக தனது பதவியை ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை. மலேஷியா நாட்டு வழக்கப்படி ஒன்பது அரச குடும்பங்களை சேர்ந்த நபர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒருவர் வீதம் பதவி வகிப்பார். தற்பொழுது இவரின் ராஜினாமாவிற்கு பிறகு அடுத்த மன்னரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முடிவடைந்து, வரும் 31 ஆம் தேதி புதிய மன்னர் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலேசிய பிரதமருடன் ரஜினி சந்திப்பு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

rajini meets malaysia pm

 

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 

சினிமாவைத் தாண்டி அவ்வப்போது பல்வேறு ஆளுமைகளை சந்திக்கும் ரஜினி, சமீபத்தில் இமயமலை பயணம் மேற்கொண்ட பிறகு தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன. 

 

அந்த வகையில் தற்போது மலேசியா சென்றுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அந்நாட்டு பிரதமர், "ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை சந்தித்தேன். எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் துன்பம் தொடர்பாக அவர் அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். ரஜினிகாந்த் தொடர்ந்து திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்" என ரஜினியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

ரூ. 140 கோடிக்கு ஏலம் விடப்பட்ட திப்பு சுல்தானின் வாள்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

tipu sultan sword auction 140 crores in london 

 

திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஹைதர் அலி, தாயார் பாக்ர்-உன்-நிசா. திப்பு சுல்தான் 1782 இல் தன்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்னுடைய 32வது வயதில் சுல்தானாக அரியணை ஏறினார். அதன் பின்பு ஆங்கிலேயர்களை எதிர்த்து தொடர்ந்து போர் புரிந்தார் திப்பு சுல்தான். 1799 ஆம் ஆண்டு 4வது மைசூர் போரில் ஆங்கிலேயப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு மரணமடைந்தார். மேலும் இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர்.

 

இந்நிலையில் திப்பு சுல்தான் பயன்படுத்தி வந்த வாள் இங்கிலாந்தில் உள்ள லண்டன் பான்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏலத்திற்கு வந்தது. அப்போது இந்த வாளை ஏலத்தில் எடுக்க இருவரிடையே கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த வாளானது ஏலத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இது 7 மடங்கு அதிகமாக விலை போனது. இந்த வாள் 14 மில்லியன் பவுண்டுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 140 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

 

திப்பு சுல்தான் 4 ஆம் மைசூர் போரில் கொல்லப்பட்ட பிறகு இந்த வாள் இங்கிலாந்தின் மேஜர் ஜெனரல் டேவிட் பயர்டுக்கு அவரது வீரத்துக்காக வழங்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. திப்பு சுல்தானின் வாள் ஏலம் விடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது.