Skip to main content

லண்டனில் பிக் பென் கடிகாரம் பராமரிப்பு காரணமாக, 4 ஆண்டுகள் இயங்காது

Published on 16/08/2017 | Edited on 16/08/2017
லண்டனில் பிக் பென் கடிகாரம் பராமரிப்பு காரணமாக, 4 ஆண்டுகள் இயங்காது

பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த 1859 ஆம் ஆண்டு பிக் பென் கடிகாரம் நிறுவப்பட்டது. 157 ஆண்டுகளாக இயங்கி வரும் பிக் பென் கடிகாரம் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோன்று பராமரிப்பு பணிகளுக்காக கடிகாரத்தின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, வரும் 2021 ஆம் ஆண்டு வரை கடிகாரம் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பரிமரிப்பு பணிகளுக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த 1983, 1985, 2007 ஆகிய ஆண்டுகளில் பிக் பென் கடிகாரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்