Skip to main content

உபேர் ஹெலிகாப்டர் வந்தாச்சி... பறக்க பைசா எவ்வளவு தெரியுமா..?

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

அமெரிக்காவில் போக்குவரத்தை குறைக்க உபேர் நிறுவனம் ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.அமெரிக்காவில் உள்ள பிரபல உபர் நிறுவனம் பொதுமக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கான வரவேற்பு பொதுமக்களிடையே தொடர்ந்து கிடைத்து வருகிறது. முதல்முறையாக குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. துவக்கத்தில் இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என பொதுமக்கள் எண்ணியதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால், பயனுக்கு வந்தபிறகு காரைவிட சற்றே அதிகமான விலை இருப்பதால் தற்போது அனைவரிடமும் வரவேற்பு குவிந்துள்ளது.
 

cvn



முதல் கட்டமாக போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக டவுண்டவுன் பகுதியிலிருந்து ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையம் வரை செல்வதற்காக இந்த சேவை பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக கார் அல்லது பேருந்துகளில் டவுண்டவுனில் இருந்து விமான நிலையம் செல்ல குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் உபெரின் இந்த ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தி சென்றால், வெறும் 8 நிமிடங்களில் விமானநிலையத்தை அடையலாம். கட்டணமும் கார் சேவையை விட சற்றே அதிகமாக இருப்பதால் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரேநேரத்தில் நான்கு முதல் ஐந்து பேர் வரை ஏற்றிச் செல்லும் அளவிற்கு இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பை பொறுத்து ஹெலிகாப்டரில் எண்ணிக்கையை அதிகப்படுத்த உபேர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ் அப் மூலமே வாகனத்தை புக் செய்யலாம் - இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சேவை!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

uber

 

ஓலா, உபேர் ஆகிய தளங்கள் மூலம் வாகனங்களை புக் செய்து பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உபேர் நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாகவே வாகனத்தை புக் செய்யும் வசதியை அறிமுப்படுத்தவுள்ளது. இதன்மூலம் இனி வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமே வாகனத்தை புக் செய்யலாம்.

 

இந்த வசதி முதலில், சோதனை முயற்சியாக லக்னோவில் தொடங்கப்படுகிறது. அதன்பின்னர் மற்ற நகரங்களுக்கும் விரிவு செய்யப்படவுள்ளது. இந்த சேவை அமலுக்கு வரும்போது வாகனங்களை புக் செய்ய செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

 

வாகனம் எப்போது வந்து சேரும், ஓட்டுனரின் பெயர், அவரது எண் போன்றவற்றையும் வாட்ஸ்அப் மூலமே அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயலி மூலமாக வாகனங்களை புக் செய்யபவர்கள் பெறும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காப்பீட்டுப் பாதுகாப்புகளை வாட்ஸ்அப் மூலம் புக் செய்பவர்களும் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 

Next Story

வாடகை கார் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்... கவனிக்கவேண்டிய அம்சங்கள்...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

new rules for cab companies in india

 

 

வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்களை முறைப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் சிலவற்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

 

வாடகை கார்களை இயக்கம் பெருநிறுவனங்கள் சவாரி கட்டணம், ஓட்டுநர்களுக்கான ஊதிய தொகை உள்ளிட்டவற்றை பெரும்பாலும் தாங்களே முடிவு செய்து வந்தன. இவற்றை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்கான கட்டணத்தை அடிப்படை கட்டணமாக இந்நிறுவனங்கள் வசூலித்துக்கொள்ளலாம். இதுதவிர, அதிக சவாரிகள் உள்ள நேரத்தில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை 1.5 மடங்கு வரை உயர்த்திக்கொள்ளலாம் எனவும், சவாரிகள் குறைவான மற்ற நேரங்களில் அடிப்படை கட்டணத்திலிருந்து 50 சதவீதம் வரை இந்த கட்டணங்களைக் குறைத்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனங்கள் அதிகபட்சம் 20% கமிஷன் மட்டுமே எடுத்துக்கொண்ட மீதத்தொகை 80சதவீதத்தை ஓட்டுநருக்கு வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெருநிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான வசதிகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களுக்காக மாநில அரசு 2% தொகையை வசூலித்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  

 

இதுதவிர, இதுபோன்ற நிறுவனங்களில் ஓட்டுநராக இணைவதற்கு, சரியான அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், KYC உடன் கூடிய வங்கிக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு ஆகியவற்றை ஓட்டுநர் வைத்திருக்க வேண்டும். கூடுதலாக, ஓட்டுநருக்குக் குறைந்தபட்சம் இரண்டு வருட ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும். அவ்வாறு அனுபவம் இல்லாத ஓட்டுநரை பணிக்குச் சேர்ப்பதானால், அவர்களுக்கு அந்நிறுவனங்கள் ஓட்டுநருக்கு 15 நாட்கள் பயிற்சி கொடுக்க வேண்டும். அதன்பின்னர், ஓட்டுநர் மீதான  வரலாறு, காவல்துறை சரிபார்ப்பு ஆகியவை செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 

பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கார் ஓட்டுநர் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லையென்றால் அந்நிறுவனங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் செல்வதுடன், அவர்கள் உடனடியாக ஓட்டுநரைத் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, சக பயணிகளுடன் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும் (ஷேர் டாக்ஸி) முறையில், பெண் ஒருவர் பயணிக்க வேண்டுமானால், அவர் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும். மேலும், அவ்வாறு ஷேர் டாக்ஸியில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு.