கடந்த 4ஆம் தேதி லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரத்தில் 2750 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து, நகரத்தையே அதிரவைத்தது. இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தின்போது திருமண போட்டோ ஷூட்டில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் போட்டோ ஷூட்டின் போது, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போதே அந்த விபத்து நடந்துள்ளது. திருமண உடையில் புன்னகைத்தபடி போஸ் கொடுத்துக்கொண்டிருந்த மணப்பெண் விபத்து சத்தத்தால் அதிர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதுமே, எல்லா தருணத்தையும் முக்கியமானதாக மாற்றுபவை புகைப்படங்களே. ஆனால் திருமண போட்டோ ஷூட்டே இப்படியொரு மறக்க முடியாத தருணமாக மாறி இருக்கிறது. இந்த வீடியோவை புகைப்படக்கலைஞர் மஹமத் தீப் என்பவர் வெளியிட்டுள்ளார்.