Published on 04/12/2019 | Edited on 04/12/2019
வட கொரியாவின் கனவு நகரம் என பெயர் பெற்ற சம்ஜியோன் நகரத்தை அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளார்.
கிம் ஜோங் உன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்டு மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்தை கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 4000 குடும்பங்கள் வாசிக்க கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.