ஜப்பான் நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ நடத்திய பொதுக்கூட்டத்தில் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின் ஜப்பான் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடோ பதவியேற்றார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் அவரை சுட்டுக் கொன்றார்.
இந்நிலையில் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடோ ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள வகயமா பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்று இருந்த நபர் ஒருவர் பைப் வெடிகுண்டு ஒன்றை வீசினார். இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
இந்த தாக்குதலில் பிரதமர் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினார். பாதுகாப்புப் படையினர் பிரதமரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். குண்டு வீசிய நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. பிரதமரின் பொதுக்கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் புகைக்குண்டை வீசியது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.