பாகிஸ்தான் அதிபராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக நாளை அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

3 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் அவர், அங்கு அரசு ரீதியிலான பல சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் வெள்ளை மாளிகை சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். இந்நிலையில் நாளை இம்ரான் கான் தனி விமானம் மூலமாக பயணம் செய்யாமல், வர்த்தக விமானத்தில் பயணம் செய்ய உள்ளார்.
பொதுவாக ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர் பாதுகாப்பு கருதி தனி விமானத்தில் பயணிப்பதே இயல்பு. ஆனால் பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக இம்ரான் கான் வர்த்தக விமானத்தில் பயணமாவதாக கூறப்படுகிறது. மேலும் இம்ரான் கானுடன், தகவல்துறை அமைச்சர் ஃபிர்தோஸ் அவான், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி, ராணுவ ஜெனரல் ஜாவேத் பஜ்வா ஆகியோரும் உடன் செல்ல இருக்கின்றனர்.