அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவந்த வர்த்தக முன்னுரிமை சலுகையை (ஜிஎஸ்பி) ரத்து செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள இந்திய வர்த்தக செயலர் அனுப் வாத்வான், இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஜிஎஸ்பியை ரத்து செய்வதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் மொத்த மதிப்பில் இந்த சலுகையைப் பெறுவது 560 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் மட்டுமே.
அந்த 560 கோடி டாலரில் 19 கோடி டாலர் அளவு மட்டுமே இந்தியாவுக்கு சலுகையாக கிடைக்கிறது. ஆகையால் இது மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2017-18-ம் நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து 4,788 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. அதேசமயம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான பொருள்களின் மதிப்பு 2,661 கோடி டாலர்.