கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியர் பால் கட்டுமானும் அவரது குழுவினரும், இந்தியா கோவிட் ட்ராக்கரை உருவாக்கி, இந்திய கரோனா பாதிப்புகளை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்கள், இந்தியாவில் தீவிரமான அதேநேரத்தில் குறுகிய கால கரோனா அலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பேராசிரியர் பால் கட்டுமான், தினசரி கரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் ஒரு கால கட்டத்தை இந்தியா காணும் எனவும், இந்த காலகட்டம் (முதலிரண்டு அலைகளை விட) ஒப்பீட்டளவில் குறைவானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சில நாட்களில் அதிகரிக்க தொடங்கலாம் என்றும், ஒருவாரத்திற்குள் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கும் என்றும் பால் கட்டுமான் தெரிவித்துள்ளார்.
பால் கட்டுமான் மற்றும் குழுவினரின் இந்தியா கோவிட் ட்ராக்கர், இரண்டாவது அலை மே மாதத்தில் உச்சம் தொடும் என்பதையும், ஆகஸ்டில் கரோனா பாதிப்பு குறைய தொடங்கும் எனவும் சரியாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.