சீனா உழைப்பாளர்களின் நாடு. மின் பொருட்களுக்கான உற்பத்தியில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை பெற்றுள்ள நாடு. ஆனால் இந்த நாட்டில்தான் இப்படியும் ஒரு நிறுவனம் இருக்கிறது. தெற்கு சீனாவில் உள்ள ஒரு நிறுவனம் அவர்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றது. அண்மையில்தான் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.
கரப்பான் பூச்சிகளை சாப்பிட வேண்டும், சிறுநீர் அருந்த வேண்டும், மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும், பாத்ரூமில் வரும் நீரை அருந்த வேண்டும். இந்த தண்டனைகளெல்லாம் திருடியதற்கோ, பெரிய குற்றம் செய்ததற்கோ இல்லை. லெதர் ஷூ அணியாமல் வருவது, கசங்கிய உடை அல்லது நீட்டாக ட்ரெஸ் அணியாமல் வருவது இவைகளுக்கு அந்தமாதிரியான தண்டனைகள். இதையெல்லாம் செய்யமாட்டேன் என சொன்னால் பெல்ட் அடி நிச்சயம், மேலும் சம்பளப் பிடித்தமும் செய்யப்படும்.
மேலும், இந்த தண்டனைகள் எல்லாம் தனியாக தரப்படமாட்டாது. அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரின் முன்னிலையில்தான் இந்த தண்டனைகள் நிறைவேற்றப்படும். இதனால் பலரும் அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். குடும்ப சூழ்நிலையாலோ அல்லது வேறு காரணத்தினாலோ வெக்கம், மானம், சூடு, சொரணை இதையெல்லாம் மறைத்தவர்கள் அல்லது இழந்தவர்கள் நிறையபேர் இன்னும் அங்கு வேலை செய்கின்றனர் என்பதுதான் வருந்தத்தக்க பொருள்.