இலங்கை போரில் சேதமடைந்த நூலகங்களை தமிழக அரசு கட்டித் தரும்!
இலங்கை போரில் சேதமடைந்த நூலகங்களை தமிழக அரசு கட்டித் தரும். இந்தியாவில் எந்த தேர்வுகள் நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருக்கிறார்.
மலேசியாவில் தமிழ்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நாட்டு கல்வி அமைச்சகமும், சென்னை பல்லைக்கழகமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். உலக செய்திகளை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 430 கோடி ரூபாய் செலவில் கணினி மையங்கள் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இலங்கை போரில் சிதிலமடைந்த நூலகங்கள் தமிழக அரசால் கட்டித்தரப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.