ஜார்ஜ் ஃபிளாய்ட் இறப்பு குறித்த 20 பக்கங்கள் கொண்ட உடற்கூறாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் இறப்பு குறித்த 20 பக்கங்கள் கொண்ட உடற்கூறாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இறப்பதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜார்ஜிற்கு கரோனா தோற்று இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரியால் கட்டுப்படுத்தப்பட்டபோது ஃபிளாய்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அவரின் தோள்பட்டை, முகம், கைகள், கால்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.