மக்களவை தேர்தல் முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இதனையடுத்து வரும் 30 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மோடியின் வெற்றிக்கு பிறகு நீண்ட காலமாக பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராஹிம் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜித் தோவல் தலைமையிலான இந்திய உளவுத்துறையினர் தாவூத் இப்ராஹிமின் இயக்கத்தினரை உளவு பார்த்து வந்ததாக தகவல் வந்த நிலையில், தற்போது மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் தாவூத் இப்ராஹிமின் இந்த சந்திப்பு தகவல் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துடனான இந்த சந்திப்பில் தாவூதின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் குறித்தும் பேசப்பட்டதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.