ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக், ஃபிரான்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணமாகச் சென்றுள்ளார். அவர் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடான சந்திபிற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பத்திரிகையாளர்களிடம் ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் பேசிக் கொண்டிருந்தபோதே லேசான மழைபெய்தது. இதனையடுத்த ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடைபிடித்தார். அதனையடுத்து உதவியாளர் ஒருவர் இம்மானுவேல் மக்ரோனுக்குக் குடைபிடித்தார்.
இன்னொரு உதவியாளர் இம்மானுவேல் மக்ரோன், ஸ்லோவாக்கியா பிரதமருக்குக் பிடித்த குடையை வாங்கி, பிடிக்க முயன்றார். ஆனால் இம்மானுவேல் மக்ரோன் குடையைத் தர மறுத்துவிட்டார். ஸ்லோவாக்கியா பிரதமர் பேசி முடிக்கும் வரை, இம்மானுவேல் மக்ரோன், அவருக்குக் குடைப்பிடித்தபடி நின்றார்.
ஒரு நாட்டின் அதிபர், இன்னொரு நாட்டின் பிரதமருக்குக் குடைபிடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.