Published on 18/03/2020 | Edited on 18/03/2020
உலகளவில் முதன் முதலில் விலங்குகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீட்டு நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஹாங்காங் நாட்டில் பெண் எஜமானியிடமிருந்து பொமரெனியன் வகையைச் சேர்ந்த நாய்க்கு கரோனா பரவியிருந்தது. அந்த நாய்க்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,965 ஆக அதிகரித்துள்ளது. 165 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,98,214 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீனா உத்தரவிட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்து சோதனையை அமெரிக்கா நேற்று (17/03/2020) தொடங்கிய நிலையில் சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.