Published on 29/10/2018 | Edited on 29/10/2018

இந்தோனேசியா, ஜகர்த்தாவிலிருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு சென்ற லயன் ஏர் விமானம் நடுவானில் மாயமானது. ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட 13வது நிமிடத்தில் விமானம் மாயமாகியுள்ளது. காலை 6.33 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இப்போதுவரை தகவல்கள் இல்லை. விமானத்தை தேடும்பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.