Published on 14/01/2019 | Edited on 14/01/2019
கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து சரக்குகளை ஏற்றி சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. கிர்கிஸ்தான் தலைநகரான பிஸ்கெக் நகர விமான நிலையத்திலிருந்து மாமிசம் அடங்கிய சரக்கு பெட்டகங்களை ஏற்றி சென்ற போயிங் 707 ரக விமானம் மோசமான வானிலை காரணமாக விமானநிலைய ஓடுதளத்தில் இறங்குவதற்கு பதிலாக அருகில் கட்டிடங்கள் உள்ள பகுதியில் கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 16 பெரும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையே இந்த விபத்துக் காரணம் எனவும் ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video shows the immediate aftermath of plane crash near #Iran's Karaj pic.twitter.com/nHNChTPHOw
— Press TV (@PressTV) January 14, 2019