Skip to main content

உலகின் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து குறுஞ்செய்தியால் ஒரு கோடியை அள்ளிய வோடபோன்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

chritmas

 

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து முதன்முதலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பாரிஸில் ஏலம் விடப்பட்டுள்ளது. வோடபோன் நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனம், அந்த முதல் கிறிஸ்துமஸ் குறுஞ்செய்தியை ஏலத்தில் விட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஏலம் விடப்பட்ட அந்த குறுஞ்செய்தி, டிசம்பர் 3 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. வோடபோன் பொறியாளர் நீல் பாப்வொர்த், தனது கணினியிலிருந்து ஒரு மேலாளருக்கு இந்த வாழ்த்து குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதனை அவர் அப்போது பயன்பாட்டிலிருந்த "ஆர்பிடெல்" தொலைபேசியில் ரீசிவ் செய்துள்ளார்.

 

தற்போது இந்த குறுஞ்செய்தி 1,07,000 யூரோக்களுக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாயாகும்.

 

 

சார்ந்த செய்திகள்