31 வயதான கோபிரைட் செங்குத்தான மலைகளில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஏறுபவர். இவருடன் சென்ற மற்றொரு வீரர் காயங்களுடன் தப்பியுள்ளார். உலக அளவில் அறியப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் பிரட் கோபிரைட், கடந்த வியாழக்கிழமை ஷைனிங் பாத் என்று அழைக்கப்படும் இடத்தில் புதன்கிழமை மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார்.
கோபிரைட்டும் மற்றொரு அமெரிக்க மலையேற்ற வீரரான எய்டன் ஜேக்கப்சன்னும் மெக்சிகோவில் நியோவோ லியோன் என்ற இடத்தில் மலையேற்றத்துக்குப் போயிருக்கிறார்கள். இந்த மலையேற்றத்தில் 900 மீட்டர் உயர உச்சியை அடைந்த கோபிரைட், மீண்டும் கீழே இறங்கும்போது தவறி விழுந்து இறந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இருவருக்குமே சறுக்கல் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர். ஜேக்கப்சன் அதிர்ஷ்டவசமாக ஒரு பாறையைப் பிடித்துக்கொண்டு தப்பியிருக்கிறார். ஆனால் கோபிரைட் சுமார் 300 மீட்டர் கீழே இருந்த பாறையில் விழுந்துள்ளார்.