Published on 24/06/2019 | Edited on 24/06/2019
இந்தோனேசியாவின் தானிம்பார் தீவு அருகே உள்ள பாண்டா கடற்கரை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் இது 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ரிக்டர் அளவு 7-க்கு மேல் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக சேதத்தையும், சுனாமி தாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்தோனேசியாவுக்கு மிக அருகில் இருக்கும் பபுவா தீவிலும் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.