
லண்டனில், புகழ்பெற்ற பார்க் டாட் காமில் (Bark.com) ஜோடிகளின் விசித்திர விளம்பரத்தை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். அப்படி என்ன விளம்பரம் அது..
தற்போது உள்ள காலத்தில் திருமணம் என்றாலே அதில் பல்வேறு விசித்திரங்களை செய்து அசத்தி அனைவரின் கவனத்தையும் பெறுவது வாடிக்கையாகி வருகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினம் முதல் தங்கள் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதை ஜோடிகள் திட்டமிட்டு, அசத்தி வருகின்றனர்.
இப்படி அசத்தும் ஜோடிகள் தங்களின் திருமணத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து நினைவுபடுத்தி வைத்துக்கொள்ள மட்டும் வட்டு விடுவார்களா என்ன? ப்ரீ வெடிங் ஷூட், போஸ்ட் வெடிங் ஷூட் என திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஒவ்வொரு சம்பவத்தையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொள்கின்றனர்.
அந்தவகையில் இங்கிலாந்தில் ஒரு ஜோடி, அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள திருமணத்திற்கு கடந்த வருடமே திட்டமிட்டு வீடியோ எடுக்க வீடியோகிராபர் தேவை என விளம்பரப்படுத்தி ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வளவுக்கும் 2 மணி நேரம் வீடியோ எடுக்க ரூ.1.60 லட்சம் சம்பளம் என விளம்பரப்படுத்தியும் ஒளிப்பதிவாளர் கிடைக்கவில்லை.
அப்படி அவர்கள் எதைத்தான் வீடியோ எடுக்க ஒளிப்பதிவாளரை தேடுகிறார்கள் என்கிறீர்களா? யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம். அந்த ஜோடி தங்கள் முதல் இரவை படம் எடுக்க தான் வீடியோகிராபரை தேடுகிறார்கள். ’இது விசித்திரமான கோரிக்கை என்பது எங்களுக்குத் தெரியும்', ஆனால் நாங்கள் எங்கள் திருமண நாள் மட்டுமல்ல அந்த திருமண முதல் இரவும் முக்கியம் என்று எண்ணுகிறோம்.
மேலும், திருமணத்தின் எந்த நேரத்தையும் மறக்க விரும்பவில்லை. அதனால், வரவேற்பு விழாவுக்கு பிறகு நடைபெறும் இரவு நிகழ்ச்சிகளையும் நாங்கள் வீடியோ எடுத்து வைத்துக்கொள்ள விரும்புகிறோம். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என கூறி வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.