பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் 'விளாடிவோஸ்டக்' நகரைச் சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் ரஷ்ய அதிபர் புதினுடன் நடந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு ஒப்பந்தக்கால் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியா - ரஷ்யா இடையே எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு, வர்த்தகம், இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளித்தல், ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை இணைந்து தயாரித்தல் உள்பட 25 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும் சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு குறித்தும் பரிசீலனை செய்யவும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக விளாடிவோஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி, புதினுடன் சென்று நேரில் பார்வையிட்டார். அப்போது கப்பல் கட்டும் தளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மோடியை அழைத்துச் சென்ற புதின், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.