உக்ரைனில் தொல்பொருள் ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான படிம எலும்புகூடு காதலன் காதலி என இருவரும் பின்னி அன்புடன் இறுக தழுவி இறந்த நிலையில் இருப்பது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு உக்கரைனில் தெர்னோபில் என்ற இடத்தில் சமீபத்தில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு பழமையான ஜோடி எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஜோடி எலும்புக்கூடுகள் ஒன்றை ஓன்று ஆரத்தழுவி பார்த்தவுடனே கணவன் மனைவி அல்லது காதலன் காதலி நெருக்கத்தின் போது மரணத்தை எதிர்கொண்டது போன்றும் அல்லது ஒன்றாக இறந்துவிட வேண்டும் என முடிவெடுத்து இறந்தது போன்றும் பார்ப்பதற்கே அன்பு மற்றும் கருணையின் வடிவமாக இருந்தது.
அந்த எலும்புக்கூடுகள் பற்றி தொல்பொருள் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகையில்,
இந்த தம்பதிகளின் எலும்புக்கூடு 3000 வருடத்திற்கு பழமையானது. உக்ரைன் மனித கலாச்சாரத்தில் காதல் என்ற வார்த்தை புனிதமாக பொறுப்புணர்வுடன் கையாளப்பட்டது. அப்படி இருக்க இந்த எலும்புக்கூடு படிவத்தை பார்க்கும்பொழுது ஏற்கனவே இறந்த கணவன் அல்லது காதலனை காதலி விட்டு பிரிய மனமின்றி அவரைபற்றி அணைத்து இறந்திருக்கலாம். எப்படியோ இதுவும் உண்மை காதலுக்கான மற்றோரு சான்று என்று கூறி பெருமைப்பட்டனர்.