ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. உக்ரைனில் 70 க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்த நிலையில் 11 விமான தளங்களையும் அழித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தலைநகரான கிவ்-ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிவ் நகரத்தின் மேயர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாகக் கிவ் நகரத்தைச் சுற்றியுள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் ரஷ்யாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போர் பதற்றத்தின் நிலையை உணர்த்துவதற்காக இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.