Published on 28/08/2019 | Edited on 28/08/2019
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் முதலைகளின் நடமாட்டம் கடந்த சில வருடங்களாகவே அதிகமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த 6 மாதங்களாக அவை மனிதர்கள் நடமாடும் பகுதிகளில் சர்வ சாதரணமாக நடமாடி வருகின்றன. இந்நிலையில், ஃப்ளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கோல்ப் விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த 7 அடி நீள முதலை ஒன்று அவரை கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்திருக்கிறது.
அதை பார்த்த அவர் எப்போதும் போல கோல்ப் விளையாடியிருக்கிறார். பந்து முதலையின் தலைக்கு மேல் பறந்து போன போதும், முதலை அவரை தாக்க முயற்சிக்கவில்லை. இதற்கு முன்னர் இதே போல கடந்த வாரம் மழை நேரத்தில் ராட்சத முதலை ஒன்று கோல்ப் மைதானத்தை கடந்து போன வீடியோ வெளியானது.