சீனாவில் காலியாக இருந்த சாலையில் முகமூடி அணிந்த ஒருவருடைய சடலம் கிடந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகமூடிகளை அனைவரும் அணிந்து வருகிறார்கள்.
இந்த நோய் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பெரும்பாலானவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதில்லை. இந்நிலையில், நேற்று வுஹான் நகரில் உள்ள சாலை ஓரத்தில் ஒருவர் முகமூடி அணிந்த நிலையில் சாலையோரத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் யாரும் அவரின் அருகில் செல்லவில்லை. நீண்ட முயற்சிக்கு பிறகு அவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அம்மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை மருத்துவர்கள் சோதனை செய்து வருகிறார்கள்.